ஹோட்டலில் இளைஞர், யுவதிகளின் அட்டகாசம்! பதுங்கி பிடித்த பொலிஸார்

Report Print Vethu Vethu in சமூகம்

பேஸ்புக் ஊடாக அறிந்து கொண்ட நண்பர்கள் நடத்திய விருந்தை சுற்றிவளைத்த பொலிஸார் 19 இளைஞர், யுவதிகளை கைது செய்துள்ளனர்.

அம்பலங்கொட பிரதேசத்திலுள்ள ஹோட்டலுக்குள் விருந்து நடத்திய இளைஞர், யுவதிகள் 19 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் ஹோட்டலில் மதுபானம் அருந்தி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 பேர் விருந்தில் கலந்து கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில் ஹோட்டலுக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹோட்டலுக்கு செல்லும் போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பலபிட்டிய மற்றும் அம்பலங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த ஹோட்டலுக்குள் மதுபானம் மற்றும் போதைப்மருந்து பயன்படுத்தி கொண்டிருந்த இளைஞர் யுவதிகள், விருந்து நடத்துவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்காரணமாக அம்பலங்கொட பொலிஸார் அந்த ஹோட்டலுக்கு அருகில் மறைந்திருந்து இவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.