வெள்ளவத்தை - தெஹிவளை கடற்பரப்பில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

Report Print Vethu Vethu in சமூகம்

கொள்ளுப்பிட்டியவில் இருந்து தெஹிவளை வரையான கடற்கரையை அபிவிருத்தி செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் பூங்கா ஒன்றை நிர்மாணிப்பதற்காக சமர்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூப்பசிங்க தெரிவித்துள்ளார்.

85 ஹெக்டெயர் நிலப்பரப்பில் பூங்காவை நிர்மாணிப்பதற்காக 300 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது.

இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கம் மற்றும் தனியார் துறையினர் இணைந்து இந்த இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொழுதுபோக்கு நடவடிக்கைகளை கொண்ட உலகின் மிக சிறந்த கடற்கரையாக இந்த பிரதேசத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவில் ஒரே நேரத்தில் 50000 பேர் பயன் அடையும் வகையிலும் 3000 வாகனங்கள் உள்நுழைய கூடிய வகையிலும் நிர்மாணிப்படவுள்ளது.

கடற்பகுதிக்கு செல்லும் அனைவருக்கும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.