இலங்கையில் இதுவரை சிக்காத அரிய வகை மீனினம் கண்டுபிடிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படாத மீனினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காலி, அஹங்கம பிரதேசத்தில் மீனவர்கள் வீசிய வலையில் இந்த மீன்கள் சிக்கியுள்ளன.

சாதாரண மீன்களை விடவும் உருவத்தில் மிகவும் வித்தியாசமான முறையில் இந்த மீன்கள் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இவ்வாறான மீன் இனம் இதுவரை சிக்கவில்லை என மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

குறித்த மீனினம் தென்பகுதிக் கடலில் இதுவரை சிக்காத போதிலும், யாழ்.குடாநாட்டு மீனவர்கள் இது பலகாலமாக வடபகுதிக் கடலில் மீனவர்களால் பிடிக்கப்பட்டு வருவதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த மீனின் அலகு கிளியின் அலகை ஒத்திருப்பதால் கிளி மீன் என அழைப்பதாகவும் இது 25 - 50 கிலோ வரை நிறையுடைய மீனாகவும் பிடித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடுகின்றார்.

மற்றைய மீன் குண்டேறு என்றும் அழைக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறுகின்றார்.