கண்ணீர் சிந்த வைத்த 9 வயது சிறுமியின் உருக்கமான கோரிக்கை!

Report Print Nivetha in சமூகம்

காணாமல்போனோர் அலுவலகத்தின் அதிகாரிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடுவதற்காக அவர்களை இன்று கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்திற்கு அழைத்திருந்தனர்.

இதன்போது, 9 வயது சிறுமி ஒருவர், அருட்தந்தையுடன் சரணடைந்த எனது அப்பாவை தேடித்தாருங்கள் என உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

தான் இதுவரை அப்பாவின் முகத்தை பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், அங்கிருந்த அனைவரும் கண்ணீர் சிந்தியுள்ளனர்.

குறித்த சிறுமியின் தந்தையான திலக் என்பவர் விடுதலைப் புலிகளின் திரைப்பட பிரிவில் கடமையாற்றியவர்.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் சரணடைந்திருந்தனர். இதன் போது, திலக் என்பவரும் சரணடைந்திருந்தார்.

இதேவேளை, அதிகாரிகளை நோக்கி நகர்ந்த உறவுகள் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட, சரணடைந்த உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி ஒப்பாரியிட்டு அழுது புலம்பியுள்ளனர்.