வெளிநாட்டு பெண்ணொருவருக்கு இலங்கையில் கடூழிய சிறைத்தண்டனை

Report Print Vethu Vethu in சமூகம்

வெளிநாட்டு பெண்ணொருவருக்கு இலங்கையில் கடுமையான வேலையுடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செக் குடியரசு நாட்டை சேர்த்த ஆசிரியை ஒருவருக்கு, நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜவினால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஊடாக தாய்லாந்திற்கு 5 கோடி ரூபாய் பெறுமதியான, 5 கிலோ 518 கிராம கொக்கெய்னுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட செக் குடியரசை சேர்ந்த கிலிமோடோவா மார்கிடீன் என்ற 42 வயதான பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டுளள்து.

கடந்த 2015ஆம் ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 14ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரிடம் இருந்து சிறுவர் புத்தகங்களின் அட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொக்கெய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.