காணாமல்போனோர் அலுவலகம் மீது நம்பிக்கை இல்லை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டம், கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்திற்கு முன்பாக இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது, காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிக பீரிஸ் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த அலுவலகத்தினை தாம் ஏற்கவில்லை எனவும், இந்த கலந்துரையாடலில் பங்கேற்கப்போவதில்லை என்றும் சாலிக பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காணாமல்போனோர் அலுவலகம் மீது நம்பிக்கை இல்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த போராட்டம் பிற்பகல் வரை நீடித்தமை குறிப்பிடதக்கது.