யாழ்.கோட்டையில் படையினரின் முகாம்கள் மூடப்படாது! இராணுவம் அறிவிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

வடக்கில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் மூடப்படமாட்டாது என்று இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இன்று அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் படையினரின் முகாம்கள் மூடப்படவுள்ளதாக வெளியான தகவல் உண்மை இல்லை எனவும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் மூலம் பொதுமக்கள் பிழையாக வழிநடத்தப்படக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, படையினர் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் தமது பணிகளை தொடர்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல்வாதிகளின் பிடிக்குள் உள்ள சில ஊடகங்களே இவ்வாறான பிழையான தகவல்களை பரப்புவதாகவும் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.