யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான்கு தமிழர்கள் தமிழகத்தில் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான்கு தமிழர்களை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வார இறுதியில் நால்வரும் சட்டவிரோதமாக ராமேஸ்வரத்தின் ஊடாக படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயற்சித் போது தமிழக பொலிஸார் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 34, 23, 26 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் ஏற்கனவே மேட்டுப்பட்டி முகாமில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவர்களில் ஒரு தம்பதியினரும் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.