கிண்ணியாவில் புதிய வீதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகமார் பகுதியில் புதிய வீதி நிர்மாணத்திற்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றுள்து.

குறித்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளதுடன், மகமாரில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கி அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார்.

5 மில்லியன் ரூபா செலவில் வீதி நிர்மாணிக்கப்படுகின்றது. நீண்டகால குறைபாடாக இருந்த நூலகத் தேவையும், நிவர்த்தி செய்யப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியின் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் நஸீரின் வேண்டுகோளை ஏற்று இவ்விரு திட்டங்களையும் நிறைவேற்றிய எம்.எஸ்.தௌபீக்கு நன்றிகளையும் தெரிவிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நிகழ்வுவில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார், நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோகச் செயலாளர் எம்.எச்.சனூஸ், கிண்ணியா நகர சபையின் பிரதி தவிசாளர் ஐயூப் நளீம் சப்ரீன், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.