மாங்குளம் பொதுச்சந்தை கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட மாங்குளம் பொதுச் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதியை பெற்றுக்கொண்ட பல நபர்கள் கடைகளை திறக்காது அந்த கடைகளை வேறு நபர்களுக்கு கூடிய வாடகைக்கு வழங்க முயற்ச்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த கடைகளை உரியவர்கள் திறக்காவிட்டால் பிரதேச சபை அதனை மீள பெற்று உரிய வாடகைக்கு வேறு நபர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரப்படுகிறது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை 4வது அமர்வில் இவ்வாறு பிரதேச சபை கடைகளை வாடகைக்கு பெற்று வேறு நபர்களுக்கு வாடகைக்கு கொடுப்பதை தடுக்கும் முகமாக, கடைகளை பெற்ற நபர் கடை நடத்தாவிட்டால் அந்த கடையை பிரதேச சபை மீள பெற்று அதை வேறு நபர்களுக்கு வழங்குவதாக தீர்மானம் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் பிரதேச சபை கடைகளுக்கு இடைத்தரகர்களாக செயற்படும் இவ்வாறானவர்களை நீக்கி கடை நடத்தும் ஆர்வமுள்ள தேவையுள்ளவர்களுக்கு கடைகளை வழங்கவேண்டியது பிரதேச சபையின் பொறுப்பாகும் என குறிப்பிடப்படுகின்றது.