இலங்கையில் மரணத்திற்காக காத்திருக்கும் 4 பாகிஸ்தானிய பிரஜைகள்

Report Print Evlina in சமூகம்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களில் பாகிஸ்தான் பிரஜைகள் 4 பேர் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரஜைகள் உள்ளிட்ட 18 மரண தண்டனை கைதிகளின் பெயர் விபரப்பட்டியல் நீதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக் கைதிகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அலுக்கோசு பதவிக்காக அடுத்த வாரம் முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.