காணாமல்போயுள்ள களனி பல்கலைக்கழக மாணவன்: தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்

Report Print Evlina in சமூகம்

அரநாயக்க - அசுபினி நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல்போயுள்ள களனி பல்கலைக்கழக மாணவனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த இளைஞர் கடந்த 14ஆம் திகதி நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்த பல்கலைக்கழக மாணவர், நீர்வீழ்ச்சியின் தாழ் நில பகுதியில் காணப்படுகின்ற கற்குகைக்குள் நீரினால் இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கற்குகை பகுதிக்குள் சிக்குண்டவர்கள் இதுவரை உயிருடன் மீட்கப்படவில்லை என இந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் அரநாயக்க தாழ்வான பிரதேசத்தில் வசிக்கும் தம்பிக்க சம்பத் குறுவிட்ட என்ற இளைஞரே காணாமல்போயுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.