மரண தண்டனை பட்டியலின் முதல் பெயர் தொடர்பில் நீதி அமைச்சர் வெளிப்படுத்தியுள்ள தகவல்

Report Print Sujitha Sri in சமூகம்

மரண தண்டணை பெயர் பட்டியலில் முதலாவது பெயரே ஒரு பெண்ணுடையது என அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி - கஹவத்தை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

போதைப்பொருள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களில் முதன்மையானவர்கள் பெண்களே.

அத்துடன் அதிகமாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களும் பெண்களாகவே இருப்பது கவலையளிக்கும் விடயமாகும்.

சிறை தண்டனை பெற்று அங்கு போய் வாழ்வதே மிகவும் மோசமான விடயமாகும். இந்த நிலையில் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் மரண தண்டனை பட்டியலை எடுத்து பார்த்தால் முதலில் பெண்ணொருவரின் பெயரே உள்ளது என அவர் கூறியுள்ளார்.