தனது குழந்தைக்கு மதுபானம் வழங்கி சர்ச்சையை ஏற்படுத்திய தந்தை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குழந்தைக்கு பியர் வழங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டது.
இது தொடர்பில் தீவிர விசாரணைகளை நடத்திய பொலிஸார், தந்தை தொடர்பான தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
அனுராதபுரம், மீகாலவ பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படட் ஒரு வயது நிரம்பிய குழந்தை வைத்திய பரிசோதனைக்காக அனுராதபுர நீதிமன்ற வைத்தியரிடம் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.