திருமணம் என்ற பெயரில் பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலை

Report Print Vethu Vethu in சமூகம்
382Shares

பெண் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி பெருந்தொகை பணம் மோசடி செய்த நபர் கைது செய்யப்படடுள்ளார்.

திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்து குறித்த பெண்ணிடம் 25 இலட்சம் ரூபா ரூபா பணம் மோசடி செய்துள்ளார்.

தலங்கம பிரதேசத்தை சேர்ந்த பெண்ணிடம் தனது வீட்டு நிர்மாணிப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் என கூறியே பணத்தை பெற்றுள்ளார்.

எனினும் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிய குறித்த நபரை தலங்க பொலிஸ் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அம்பலன்தொட்ட பொலிஸ் பிரிவின் மாமடல ஜன்ஸகம பிரதேசதத்தை சேர்ந்த பெண் ஒருவரே குறித்த நபரால் ஏமாற்றப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.