வவுனியாவில் குடும்பப் பெண்ணொருவருக்கு ஆடையால் ஏற்பட்ட விபரீதம்

Report Print Sujitha Sri in சமூகம்

வவுனியாவில் வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பௌத்த விகாரை போன்ற உருவம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்ததாலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா - தேக்கவத்தை பகுதியை சேர்ந்த 35 வயது குடும்பப் பெண்ணே வவுனியா வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.