தலையில் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதியின் கப்பல்துறை பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை இன்று காலை சீனக்குடா பொலிஸார் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், அவர் விபத்தில் மரணித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை உயிரிழந்த பெண்ணின் தலையில் காயம் உள்ளதாகவும், சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.