கிழக்கு ஆளுநருக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் மாணவ மாணவிகள்?

Report Print Shalini in சமூகம்

கிழக்கு மாகாண மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட போதும், இதுவரை அவர் வருகைத்தரவில்லை.

இதன் காரணமாகவே விளையாட்டுப்போட்டிகளும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் கந்தளாய் - லீலாரட்ண விளையாட்டு மைதானத்தில் இன்று காலை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

கிழக்கு மாகாணத்திலிருந்து 17 வலயங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இதற்காக வருகைத்தந்திருந்தனர்.

இரண்டு மணித்தியாலங்களை கடந்தும் சிறப்பு விருந்தினர் வராத காரணத்தினால் அனைவரும் காத்துக்கொண்டு இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.