கிளிநொச்சியிலுள்ள மாற்றுத்திறனாளிகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தில் பதிவு செய்யுமாறு சங்கத்தின் தலைவர் ப. உமாகாந்தன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கமானது தனது புதிய நிரந்தரமான அலுவலகத்தை கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பித்துள்ளது.

கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கமானது வாழ்வாதாரம், கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. இருந்த போதும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாது உள்ளனர்.

ஆகவே குறித்த உதவித்திட்டத்தை அனைவருக்கும் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் அலுவலகத்தில் பதிவினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அத்தோடு, வார நாட்களில் காலை ஒன்பது மணி தொடக்கம் பிற்பகல் மூன்று மணி வரை பதிவினை மேற்கொள்ள முடியும் என்பதோடு, இப்பதிவினை 16 -07-2018 தொடக்கம் ஒரு மாத்திற்குள் மேற்கொள்ளுமாறும் மேலதிக தகவல்களுக்கு 0212283512 அல்லது 0772881760 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு சங்கத்தின் தலைவருடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.