எரிபொருள் விலையேற்றத்தைக் குறைக்குமாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Report Print Mubarak in சமூகம்

எரிபொருள் விலையேற்றத்தை உடன் குறைக்குமாறு தெரிவித்து திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ரூபாய் விழுந்தது கடன் தொகை உயர்ந்தது, வீண் செலவை, வரிச் செலவை குறை மற்றும் மக்களின் வயிற்றில் அடிக்காதே போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.