கொழும்பில் மூவருக்கு மரண தண்டனை

Report Print Jeslin Jeslin in சமூகம்
913Shares

கொலை சம்பவமொன்று தொடர்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மூன்று பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1996ம் ஆண்டு பன்னிப்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மேலும் , இந்த சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியை தாக்கி படுகாயமடையச் செய்த நபருக்கு நான்கரை வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த, பிரதிப் பிரேமசந்திர, சுதத் குமார, சுமித் ஶ்ரீலால் ஆகிய மூவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.