யாழ். சுழிபுரத்தில் மாணவி றெஜீனா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நீதிகோரியும், போதை பொருளை ஒழிக்க வலியுறுத்தியும் கிளிநொச்சி இராமநாதபுரம் பாடசாலையில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதன் போது சிறுவர்கள் என்ன பாலியல் பொம்மைகளா? பெற்றோரே பெரியோரே சிறுவர் எம்மை பாதுகாருங்கள், உன் போதைக்கு பேதை தேவையா?
இன்று றெஜீனா நாளை யார்? விழித்தெழுவோம் சிறுவர்களை காப்போம், பள்ளி பிஞ்சுகள் பாலியல் பசுக்கு தீணிகளா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இராமநாதபுரம் கிழக்கு பாடசாலை மாணவர்களின் இந்த கவனயீர்ப்பு போராட்டம் காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து ஒரு மணி நேரம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.