கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளுக்கிடையிலான 23வது மெய்வல்லுநர் விளையாட்டு போட்டிகள் இன்று (17) கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

கிழக்கு மாகாண கல்வி திணைக்களமும், விளையாட்டு திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள இப்போட்டி நிகழ்ச்சியில் 17 வலயங்களைச்சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாக பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இன்று ஆரம்பிக்கப்பட்ட இப்பேட்டி எதிர்வரும் 21ம் திகதி வரை இடம் பெறவுள்ளதாக விளையாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அசங்க அபேகுணவர்தன, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜி.முத்துபண்டா, மாகாண கல்வி பணிப்பாளர் எம்.டி.நிஸாம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.