புதிதாக அமைக்கப்பட்ட கிண்ணியா பேருந்து நிலையத்தின் இன்றைய நிலை

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிண்ணியாவில் மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதியின் பழைய வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் இதுவரைக்கும் திறக்கப்படாமை குறித்து மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இரு வருடங்கள் கடந்தும் புதிய பேருந்து நிலையத்திற்கான வேலைகள் முடிக்கப்பட்டும் இன்னும் திறக்கப்படாமையினால் போக்குவரத்தில் பஸ் தரித்து நின்று செல்வதிலும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அமைச்சரினால் இதற்கான அடிக்கல் நடப்பட்டடது.

எனவே இப் பேருந்து நிலையத்தை அவசரமாக திறக்குமாறும் மக்களுக்கான போக்குவரத்துக்கான அரச தனியார் பஸ்களை முறையாக தரித்து நின்று செல்வதற்கு இலகுபடுத்தி தருமாறு மக்கள் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.