விஜயகலா மகேஸ்வரனின் உரை வெளியீடு: முல்லைத்தீவு ஊடகவியலாளரிடம் விசாரணை

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஒருவரை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவனரினர் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விடுதலைப்புலிகள் தொடர்பில் உரை நிகழ்த்திய முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரை வெளியீடு தொடர்பில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரினால் இன்று விசாரணை இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

மாங்குளத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் (வயது 31) என்பவரே இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த ஊடகவியலாளரை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக யாழ்ப்பாணம் வருமாறு நேற்று அழைப்புவிடுத்துள்ள நிலையில் அவர் இன்று சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.