முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வுகள்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளதுடன், இதன்போது விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.

தமிழரின் பண்பாட்டுத் திரு நாட்களில் ஆடிப்பிறப்பும் ஒன்று. இதற்கு தனியானதோர் இடமுண்டு. ஆடி மாதத்தின் முதல் நாளிலே ஆடிப்பிறப்பு கடைப்பிடிக்கப்படுகின்றது.

மேலும், நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.