கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலைகளை குறிவைக்கும் போதை வர்த்தகர்கள்

Report Print Manju in சமூகம்

கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலைகளை மையப்படுத்தி போதைப்பொருள் வர்த்தகம் முன்னெடுத்துள்ளமை ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக, மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

போதைப் பொருள் வர்த்தகர்கள், பாடசாலை மாணவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கும் வகையில் பல உத்திகளைக் கையாண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புள்ளி விபரங்களின் படி, மேல் மாகாணத்தில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையில், போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அனில் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறுவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்காக புதிய வேலைத்திட்டமொன்று எதிர்வரும் வௌ்ளிக்கிழமை சுகாதார அமைச்சால் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.