இயக்கச்சி மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்களுக்கு தீர்வு வழங்க முயற்சி

Report Print Dias Dias in சமூகம்

இராணுவத்தினர் அமைத்த மண் அணைகளாலும், காவலரண்களாலும் ஆணையிறவு நீரேரியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் இயக்கச்சி பகுதி மீனவர்களின் தொழில் நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த போர் காரணமாக 1991ம் ஆண்டு இயக்கச்சி கூட்டுப்படைத் தளத்தை பாதுகாக்கும் நோக்கோடு இராணுவத்தினர் அமைத்த மண் அணைகளாலும், காவலரண்களாலும் ஆணையிறவு கடல் நீரேரிக்கு சுண்டிக்குளம் கடலில் இருந்ததான நீர் வரத்துக்களும், அதனோடு இணைந்ததான கடல் வளங்களின் வருகையும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் அதனை நம்பி ஆணையிறவு நீரேரியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் இயக்கச்சி பகுதி மீனவர்களின் தொழில் நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை நம்பி வாழும் பல குடும்பங்கள் வறுமையில் வாடித் தவிக்கின்றனர்.

இந்த நிலைமைகளை ஆராய்வதற்காக வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா நேரடியாக களப்பயணம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிடட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுத் தருவதாகவும், இராணுவத்தினர் அமைத்துள்ள மண் அணைகளையும்,காவலரண்களையும் அகற்றி இயக்கச்சி மீனவர்களுடைய ஜீவனோபாய நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் உரிய தரப்பினர் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

மேலும், இந்தக் களப் பயணத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சு.சுரேன் மற்றும் உபதவிசாளர் மு.கயன் உறுப்பினர் த.றமேஸ் ஆகியோருடன் இயக்கச்சி மீனவர் சங்கப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.