கிண்ணியாவில் வீட்டின் சுவர் விழுந்து ஒருவர் பலி

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீட்டுச் சுவர் விழுந்து ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று ரஹ்மானியா பகுதியில் நேர்ந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது பழைய வீட்டை உடைத்துக் கொண்டிருக்கும் போதே சுவரின் ஒரு பகுதி அவர் மீது விழுந்துள்ளது.

சம்பவத்தில் ரஹ்மானியா பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எஸ்.றிஸ்வான் வயது(40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.