யாழ். சாவகச்சேரி மக்களிடம் பிரதேச சபை உபதவிசாளர் விடுத்த கோரிக்கை

Report Print Evlina in சமூகம்

எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையும் 6ஆம் திகதி க.பொ.த. உயர்தரப் பரீட்சையும் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை யாழ். சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் முன்வைத்துள்ளார்.

கோவில் திருவிழாக்களில், களியாட்ட நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகள் சத்தமாக பாவிப்பதால் மாணவர்கள் படிக்க முடியவில்லை.

எனவே மாணவர்களின் நலன் கருதி ஒலிபெருக்கி பாவனையை குறைத்து சத்தத்தை குறைக்குமாறும் பிள்ளைகளின் பெற்றோர்கள் சாவகச்சேரி பிரதேச சபையிடம் முறையிட்டனர்.

இந்த நிலையில் சாவகச்சேரியில் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துமாறு சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.