வவுனியாவில் கடை உடைத்து கைவரிசையைக் காட்டிய திருடன்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, வைரவபுளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றில் இரவு இனம்தெரியாத நபர்கள் உடைத்து, அங்கிருந்த 20 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த கடையின் உரிமையாளர் இரவு வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு இன்று மீண்டும் திறப்பதற்காக வருகை தந்த போதே, கடையின் பூட்டு உடைக்கபட்டு பணம் களவாடப்பட்டதை அறிந்து கொண்டார்.

இதனையடுத்து வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அண்மை காலமாக வவுனியாவில் கடைகள் உடைக்கப்பட்டு திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.