இலங்கை கடலில் கரைந்து போன பெருந்தொகை டீசல்

Report Print Vethu Vethu in சமூகம்

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பெருந்தொகை டீசல் கடலில் கலந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

காலி கடற்பரப்பில் சுமார் 26000 லீற்றர் டீசல் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெற்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காலியில் அமைந்துள்ள களஞ்சிய அறையில் இருந்த டீசலே இவ்வாறு கசிந்துள்ளது.

மேற்பரப்பில் அமைந்துள்ள தொட்டியில் இருந்து இவ்வாறு டீசல் கசிந்து கடலுக்கு சென்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் பெற்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 3 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பணம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers