இலங்கையில் அலுக்கோசு பதவிக்கு தெரிவாவோருக்கு கிடைக்கவுள்ள அதிர்ஷ்டம்!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் மீண்டும் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், அலுக்கோசு பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்நிலையில் விண்ணப்பங்களுக்கு அமைய அலுக்கோசு பதவிக்கு தெரிவு செய்யப்படுவோருக்கு அதிகபடியான வரப்பிரசாதங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அலுக்கோசு பதவியில் உள்ளவர்களுக்கு இதுவரை வழங்கிய சம்பளத்தை விட அதிக சம்பளம் மற்றும் மேலதிக பல சலுகைகளை வழங்க சிறைச்சாலை திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.

தற்போது தொழிலாளர் தர பதவிக்கு கிடைக்கும் சித்திரவதைக்காரரின் அரசாங்க சம்பளமான 35000 ரூபாயை 50000 ரூபா வரை அதிகரிக்க முடியுமா என்பது தொடர்பில் முதலில் ஆராய்ந்து பார்க்கப்படவுள்ளது.

அவ்வாறான பதவிக்கு இணைத்து கொள்ளப்படும் நபர்களுக்கு உத்தியோகபூர்வ வீடு வழங்குவதற்கும், பாதுகாப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவைளை, இந்த சேவையில் இருந்து விலகிய இருவர் மீண்டும் தமக்கு சேவையை வழங்குமாறு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2013ஆம் ஆண்டு முதல் இந்த பதவிக்கு வெற்றிடம் காணப்பட்டுள்ளது. இந்த மாதம் 27ஆம் திகதி முதல் மீண்டும் இந்த பதவிக்கு விண்ணப்பம் கோரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.