திருகோணமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சமலங்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

ஒரு பிள்ளையின் தந்தையான குச்சவெளி, வடலிக்குளம் பகுதியை சேர்ந்த ஏ.எல்.முகம்மட் அஸாம் (26 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கட்டுத்துவக்கு என்றழைக்கப்டும் சைட்டடியான் என்ற துப்பாக்கி வெடித்ததினாலேயே உயிரிழந்திருக்கலாம் என குச்சவெளி பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.