அதிரடிப்படையினரிடம் வசமாக சிக்கிக்கொண்ட நபர்

Report Print Steephen Steephen in சமூகம்

கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த ஒருவர் ஜா-எல, தெஹியகான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையக முகாமில் அதிகாரிகள் குழு மேற்கொண்ட தேடுதலில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும், 8.4 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

Latest Offers

loading...