கொழும்பை சேர்ந்த சிறுமிகள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

களுத்துறை கெலிடோர் கடற்கரை பகுதியில் நேற்று பிற்பகல் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கெலிடோர் கடற்கரை பகுதியில் குளிப்பதற்காக சிலர் சென்றுள்ளனர். அப்போது தாய், தந்தை மற்றும் இரண்டு சிறுமிகள் கடலில் மூழ்கியுள்ளனர்.

கடற்படையின் சுழியோடிகள் இவர்களை காப்பாற்றி களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கொழும்பு - கொட்டாஞ்சேனையை சேர்ந்த 11 வயதான இரண்டு சிறுமிகளே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.