போக்குவரத்து அமைச்சரால் திருகோணமலையில் பேருந்து நிலையம் திறந்து வைப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா, மட்டக்களப்பு பிரதான வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹரூப், எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹரூப் மற்றும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...