அர்ஜுன யானையை பார்க்கச் சென்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

Report Print Murali Murali in சமூகம்

கதிர்காம திருத்தலத்தில் உள்ள அர்ஜுன என்ற பெயர் கொண்ட யானையை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பார்வையிட்டார்.

ஒன்பதாம் நாள் திருவிழாவின் போதே அமைச்சர் இந்த யானையை பார்வையிட்டுள்ளார். இந்த யானை திக்வெல்ல வெவுருகன்னல கோயிலை சர்ந்ததாகும்.

இந்த யானை 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி இலங்கை கிரிக்கெட் அணி உலகக்கிண்ணத்தை வென்ற போது பிறந்துள்ளது.

உலக கிண்ணத்தை வென்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை சிறப்பிக்கும் வகையிலேயே இந்த யானைக்கு அர்ஜுன என்ற பெயர் சூடப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.