திருகோணமலையில் போதைப் பொருளுடன் இருவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருக்காமுனைப் பகுதியிலுள்ள வயல் நிலத்தில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோவும் 69 கிராமும் 680 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் வெருகல் ஈச்சிலம்பற்று மற்றும் சேருநுவர பகுதியைச் சேர்ந்த 25,மற்றும் 43 வயதுடைய இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹேரொயின் போதைப் பொருளை விசேட பொலிஸ் அதிரடைப்படையினரால் கைப்பற்றப்பட்டு சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விசாரணைகளின் அடிப்படையில் இன்று(22) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதுடன் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.