மௌலவி ஆசிரியர் நியமனம்! அடுத்த வாரம் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

Report Print Mubarak in சமூகம்

கடந்த பல வருடங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மௌலவி ஆசிரியர் நியமனத்திற்கான அமைச்சரவை பத்திரம் அடுத்தவாரம் சமர்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டுக்கு பின்னர் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை எனவும், அதை வழங்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பல வருடமாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் வழங்குவதில் உள்ள தடைகள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளால் தனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருடன் மேற்கொண்ட கலந்துரையாடளுக்கமைய நாடளாவிய ரீதியில் 181 மௌலவி ஆசிரியர்களை மத்திய மற்றும் மாகாண பாடசாலைகளில் இணைத்து கொள்வதற்கான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால் சமர்பிக்கப்படவுள்ளது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...