கல்முனை தமிழ்ப்பிரதேச கடற்கரையை அழகுபடுத்த நடவடிக்கை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கல்முனை தமிழ்ப்பிரதேச கடற்கரை அழகுபடுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் விடுத்த வேண்டுகோளையடுத்து கல்முனை மேயர் சட்டத்தரணி எம்.எ.றக்கீப் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி மேயர் றக்கீப் நகரதிட்டமிடல் அமைச்சின் அம்பாறை மாவட்ட பொறியியலாளர் பெரோஸ்டின் சகிதம் நேற்று தமிழ்ப்பிரதேச கடற்கரையை நேரில் சென்று பார்வையிட்டார்.

நகரதிட்டமிடல் கல்முனைப்பிராந்திய மேற்பார்வையாளர் ஏ.சி.சாலுடீனும் அவருடன் சென்றிருந்தார்.

நகரஅபிவிருத்தித்தட்டத்தின் 2ஆம் கட்டத்தின்கீழ் கடற்கரை அழகுபடுத்தும் திட்டம் மற்றும் அங்குள்ள வடிகான் தேவைக்கான மதிப்பீட்டை உடனடியாகச்செய்து சமர்ப்பிக்கும் பட்சத்தில் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க முடியுமென அங்கு கூறப்பட்டது.

அதனிடையில் 300மீற்றர் தூர கடற்கரை வீதி இரவில் நடமாடமுடியாத வகையில் இருளாக இருப்பதாக உறுப்பினர் ராஜன் கூறியதையடுத்து அதனை நாளைய தினமே செய்துகொடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி அந்த தெரு மின்விளக்கு பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.