முல்லைத்தீவு மீனவர்களின் கோரிக்கை

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடியில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் பல தடவைகள் பிரதேச, மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் கூறியும் உறுதியான தீர்வுகள் கிட்டவில்லை என அந்த பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளர்.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

குறித்த மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் மணித்தியாலக் கணக்கில் கதைக்கப்பட்டாலும் இன்று வரை இதற்கான தீர்வு கிடைக்கவில்லை.

சட்டவிரோத மீன்பிடி, அத்துமீறிய தென்னிலங்கை மீனவர்களது வருகை என பல்வேறு பிரச்சினைகள் இதனைவிட உளவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை இழுக்கும் பணி நிறுத்தப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டாலும் இதுவரை நிறுத்தப்படவில்லை.

மேலும், இந்த விடயங்கள் குறித்து கவனமெடுக்க வேண்டும் எனவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.