அண்டவெளியில் ஏற்படும் மாற்றம்! இலங்கையர்களுக்கு காண வாய்ப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

எதிர்வரும் 27ஆம் திகதியான பௌர்ணமி தினத்தன்று முழுமையான சந்திர கிரகணத்தை அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு இதனை அவதானிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி இரவு 10.45 மணியளவில் ஆரம்பித்து, மறுநாள் அதிகாலை 4.58 வரை இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் இரண்டாவது முழுமையான சந்திர கிரகணம் இதுவாகும். கடந்த ஜனவரி மாதம் முழுமையான சந்திர கிரகணம் தோற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Offers