வவுனியாவில் விடுதலைப் புலிகளின் பாடல் வரிகள்! மக்களிடையே குழப்பம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - பூம்புகார் பிரதான வீதியில் அடையாளம் தெரியாத நபர்களால் எழுதப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் பாடல் வரிகளால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பூம்புகார் பிரதான வீதியில் வர்ணப்பூச்சு கொண்டு விடுதலைப் புலிகளின் பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன.

அடையாளம் தெரியாத நபர்களின் இந்த செயற்பாட்டால் நேற்று அந்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை தற்போது குறித்த பகுதியில் புலனாய்வுப் பிரிவினர் பூரண கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் குறித்த பாடல் வரிகள் யாரால் எழுதப்பட்டுள்ளது? எதற்காக எழுதப்பட்டுள்ளது? போன்ற விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Latest Offers

loading...