வெளிநாட்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்த பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர்?

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க பொலிஸாரால் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு பெண்கள் இருவரினால் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய கிரிக்கெட் வீரரின் நண்பர் நேற்று கைது செய்யப்பட்டார்.

நண்பரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், வெளிநாட்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்திற்கு தனுஷ்க குணதிலக்க தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய தனுஷ்க குணதிலக்க இன்று கைது செய்யப்பட்ட கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்த சம்பவம் குறித்த உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

இதேவேளை, தனுஷ்க குணதிலக்கவுக்கு தற்போது ஒழுக்காற்று விசாரணை ஆர்ம்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவருக்கு போட்டித்தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers