யாழ். போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் உயிரிழப்பு

Report Print Evlina in சமூகம்

யாழ். போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் குழந்தை பிரசவித்த சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த 16ஆம் திகதி பிரசவத்திற்காக காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சத்திர சிகிச்சை மூலம் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்தே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காரைநகர் - களபூமி பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இந்திரன் சிவகலா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சத்திரசிகிச்சையின் பின் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட குருதி அழுத்தமே உயிரிழப்பிற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers