குளிரூட்டிக்குள் நபரொருவர் வைத்திருந்த பொருள்? இரகசிய தகவலின் அடிப்படையில் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி 13 கிலோகிராம் பன்றி இறைச்சியை குளிரூட்டிக்குள் வைத்திருந்த நபர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கித்துல்ஊற்று, அக்போபுர பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் அனுமதிப் பத்திரமின்றி பன்றி இறைச்சியை வீட்டில் வைத்து விற்பனை செய்து வருவதாக அக்போபுர பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேகநபரை தடுத்து வைத்துள்ளதோடு, விசாரணைகளின் பின் அவரை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest Offers