ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக நீதிமன்றில் வைத்து பகிரங்க குற்றச்சாட்டு

Report Print Kamel Kamel in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றில் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்கவிடம், நீதிமன்றில் வைத்து பகிரங்கமாக இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக் கொண்டு என்னை ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பினை நான் நிராகரித்த காரணத்தினால் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றின் பிரதிவாதிக் கூண்டில் இருந்து கொண்டே ஜோன்ஸ்டன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் சொத்து விபரங்களை ஜோன்ஸ்டன் உரிய முறையில் சமர்ப்பிக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Latest Offers