தேசிய ரீதியில் முதலாம் இரண்டாம் இடங்களைப் பெற்ற மன்னார் பாடசாலை மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

Report Print Ashik in சமூகம்

அகில இலங்கை தமிழ் தின நாடகப்போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற மன்னார் அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்களையும், வாசிப்பு போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவியையும் வரவேற்கும் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று மன்னார் வலயக்கல்வி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதான பாலத்தடிக்கு முன் வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, அகில இலங்கை தமிழ் தின நாடகப்போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற மன்னார் அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவ மாணவிகளும், வாசிப்பு போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவியும், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மன்னார் வலயக்கல்வி பணிமனையில்,வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியன் தலைமையில்,பாராட்டு நிகழ்வும் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.