வேன் - முச்சக்கரவண்டி விபத்து: ஒருவர் படுகாயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

திம்புளை - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன், நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மதியம் 3 மணியளவில் லொப்கீல் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலை பகுதியிலிருந்து ஒன்றின் பின் ஒன்றாக பயணித்த வான் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் லொப்கீல் சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டிக்கு முன்னால் சென்ற வான் லொப்கீல் சந்தியில் பாதையை மாறும் சமயத்தில் பின்னால் வந்த முச்சக்கர வண்டி வானின் மீது மோதியே விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியே பலத்த காயங்களுக்கு உள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், முச்சக்கரவண்டியின் முன்பகுதி பலத்த சேதமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers